Thursday, February 13, 2014

என் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்...

காதலிக்காக ! ! !

கற்கள் அடித்த போதும் 
முட்கள் குற்றிய போதும்
வலி தெரியவில்லை .... நீ
என் கரம் பிடித்திருந்தாய்


குண்டு குழியில் வண்டி பிரயாணித்தபோதும்
வண்டி வழி தடுமாறிய போதும் நான்
கண்டு கொள்ள வில்லை.... நீ
என் வண்டியில் அமர்ந்திருந்தாய்

கவலை பல இருந்தபோதும்
கருத்து முரண் வந்த போதும்
கண் கலங்க வில்லை... நீ
என் தோள் சாய்ந்திருந்தாய்

உனை நேசித்ததில் இருந்து
ஒவ்வொருதினமும் காதலர் தினம்

உன் கரம் பிடிக்கும் நாளே என்
உண்மைக்காதலர் தினம்
அதற்காக காத்திருக்கின்றேன்
தினம் தினம் ......

நினைவுகள் மீட்டி பார்க்க
நிமிடங்கள் போதாது
உன் நினைவுகளோடு நான்...

என்றும் அன்புடன்.....
Ambi Rajee


முகப்புத்தகத்தில் பார்வையிட ....

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -