Wednesday, August 8, 2012

உன்னை வருத்தாதே 
உடன் பிறப்புக்கு வலிக்கும் - நீ
என்னை வருத்தாதே 
என் உயிருக்கே வலிக்கும்.
புலம்புகிறாள் புன்னகை இழந்தவள்..


தன்னிலை அறியா தனையனிடம்
தன்னைக்காக்க தடுமாறுகிறாள்
உடன் பிறப்பவள் - அதனால்
தடுமாறி போகிறாள் அவன் தாரமவள்..


உன்னை நீ காக்க
உடன் பிறப்பை வருத்தாதே - உன்
உயிரைக்தாக்கி உன்னவளை வருத்தாதே.


இன்றைய நிசப்த உலகத்தை மாற்ற
அன்றைய தமிழ் கவி வர வேண்டுகிறேன்..

******************
நிகழ்கால உலகை சிந்தித்து
முதல் முறையாக இவ் வரிகள்
தொடரப்பட்டது.
******************


என்றும் அன்புடன்...
AMBI RAJEE

 at facebook

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -